பல ஆண்களுடன் தொடர்பு! முதலாமாண்டு திருமண நாளில் மனைவியை போட்டுத்தள்ளிய கணவர்!! 

  0
  8
  கணவன் - மனைவி

  முதலாமாண்டு திருமண நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  முதலாமாண்டு திருமண நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகர் நகரை சேர்ந்தவர் பைசன். இவருக்கும் ஷப் நகூர் என்பவருக்கு ஓராண்டு முன் திருமணம் நடைபெற்றது. முதலாமாண்டு திருமண நாளில் பைசன்,  செல்போன் சார்ஜர் ஒயரால் ஷப் நகூரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் ரயிலில் ஏறி வெளியூருக்கு சென்றுள்ளார். வேகமாக ரயில் சென்று கொண்டிருந்த போது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

  Murder

  இருவரின் இறப்பு குறித்து பைசனின் தந்தையிடம் காவல்துறையினர்  விசாரணை செய்தனர். அப்போது என் மருமகள் ஷப் நகூருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. இதையறிந்த என் மகன் அவரை கண்டித்து வந்தார்.ஆனாலும் ஷ்ப் நகூர் அதனைப் பொருட்படுத்தாமல் பல ஆண்களிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். தனக்கு ஏன் திருமண நாள் பரிசு வாங்கி வரவில்லை என கூறி ஷப் நகூர் கணவரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே பைசன் அவரது மனைவியை கொலைசெய்துவிட்டு பயத்தில் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்” எனக்கூறினார்.