“பலான படம் பாத்தியாலே… ஏழாயிரம் ஃபைன் கட்டணும் தெரியும்ல..” வசூல் வேட்டையில் இறங்கிய போலீசார்..!

  0
  38
  ஆடியோ

  நாளைக்கு உனக்கு அபராதம் பில் வரும்.திருநெல்வேலியில் 15 பேருக்கு போயிருக்கு’ என்று மிரட்டுகிறார்.

  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளை  வைத்து எடுக்கப்படும் ஆபாச படங்களை பார்ப்பவரின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதனால் குழந்தைகள் சம்மந்தப்பட்ட ஆபாச  வீடியோக்கள் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.க்கு சென்ற புகாரின் அடிப்படையில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை அதிகம் பார்க்கும் நாடு இந்தியா என்பது தெரியவந்தது. மேலும் இதில் சென்னை  முதலிடம் பிடித்துள்ளது.

  ttn

  இதை தொடர்ந்து குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்ப்போரின் ஐபி முகவரி மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் தமிழக காவல்துறைக்கு வந்தது. இதையடுத்து இது தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள போலீசார் சமீபத்தில் திருச்சியை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். 

  இதுவொருபுறமிருக்க இதை வைத்து பணம் வசூலிக்கும் வேட்டையில் இறங்கியுள்ளனர் சில காவல்துறையினர். இதுகுறித்து வெளியாகியுள்ள ஆடியோவில், திருநெல்வேலி போலீஸ்  ஒருவர் இளைஞர் ஒருவருக்கு போன் செய்கிறார். அதில் தம்பி நீ அந்த மாதிரி படம் பார்த்து இருக்க என்று சொல்கிறார். அதற்கு அந்த இளைஞர் எந்த படம் சார் அதெல்லாம் நான் பார்க்கலையே  என்று சிரிக்க, என்னல சிரிக்குற உங்க அப்பா நம்பர் குடு என்று வாய்ஸை  உயர்ந்த அந்த இளைஞர் பயந்து விடுகிறார். உங்க வீட்டுக்கு  ஒரு பில் வரும் போய் கோர்ட்டுல இதற்கு 7 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டணும். இல்லனா உன்ன அரெஸ்ட் பண்ணிடுவோம்  என்று கூறுகிறார். மேலும் நாங்க பான்  வீடியோ பார்க்க கூட என்று சொல்லிட்டு இருக்கோம். நீ ஏன்டா பார்க்குற என்று மிரட்ட அதற்கு அந்த இளைஞர் சார் இனிமே பார்க்க மாட்டேன் சார் என்று கூறுகிறார். எங்க இருக்க,எப்போ யூஸ் பண்ண என்று விசாரித்துக் கொண்டிருக்க, நாளைக்கு உனக்கு அபராதம் பில் வரும்.திருநெல்வேலியில் 15 பேருக்கு போயிருக்கு’ என்று மிரட்டுகிறார்.

  தொடர்ந்து அந்த ஆடியோவில், உங்கள மாதிரி சின்ன பசங்களால தான்டா நாட்டுல எவ்வளவு கொலை, ரேப் நடக்குது தெரியுமா? இனிமே யூஸ் பண்ணமாட்டேன் என்று கெஞ்ச,இனிமே பார்த்தா என்ன பண்ணலாம் உன்ன? நேரா ஜெயில் தான்…நீ பேசுறது லைவ்ல போயிட்டு இருக்கு. நியூஸ் வச்சி பாரு என்று கூறுகிறார். என்று மிரட்டுகிறார். 

  ttn

  இந்த ஆடியோவானது தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தைகளின் ஆபாச படங்களைப் பார்ப்போர் மற்றும் பகிர்வோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் தரப்பில் கூறியுள்ள நிலையில், 7 ஆயிரம் அபராதம் என்பது சட்ட நடவடிக்கைகள் இல்லை. அதே சமயம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு போலீசார் சிலர் இப்படி இளைஞர்களின் செல்போன் எண்களை  எடுத்து பணம் பறிக்கும் நோக்கில்  மிரட்டி வருகிறார்கள். உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்கும் நோக்கில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற சிலரால் மற்ற காவலர்களுக்கும் அவப்பெயரே  கிடைக்கிறது என்பது வேதனைக்குரியது.  

  ttn

  இந்நிலையில் பள்ளியில் கல்வி சான்றிதழ் வாங்குவதற்காகத் தாலியைக் கழட்டி வைத்துவிட்டு சிறுமி பள்ளிக்குச் சென்றபோது ஆசிரியர்களிடம் இதுகுறித்து கூறி அழத் தொடங்கியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போன ஆசிரியர்கள், சமூக நலத்துறை அலுவலகர்களுக்கு கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் உதவியுடன்  மாணவியை மீட்டதோடு, கோபிநாத்,  மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க, சித்தூர் மாவட்ட எஸ்.பிக்கு வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி பரிந்துரைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.