பலம் தரும் வரகு அரிசி உப்புமா

  0
  12
  வரகு அரிசி உப்புமா

  தேவையான பொருட்கள்
  வரகு அரிசி -200கி
  சின்ன வெங்காயம் -10
  காய்கறி கலவை-150கி
  பச்சைமிளகாய் -2
  எண்ணெய் -3டேபிள் ஸ்பூன்
  எலுமிச்சை -1
  கடுகு -1/2டீஸ்பூன்
  உளுத்தம்பருப்பு -1/2டீஸ்பூன்
  கறிவேப்பிலை -1இலைகள்
  கொத்தமல்லித்தழை-2டேபிள்ஸ்பூன்
  உப்பு -தேவையான அளவு

  தேவையான பொருட்கள்
  வரகு அரிசி -200கி
  சின்ன வெங்காயம் -10
  காய்கறி கலவை-150கி
  பச்சைமிளகாய் -2
  எண்ணெய் -3டேபிள் ஸ்பூன்
  எலுமிச்சை -1
  கடுகு -1/2டீஸ்பூன்
  உளுத்தம்பருப்பு -1/2டீஸ்பூன்
  கறிவேப்பிலை -1இலைகள்
  கொத்தமல்லித்தழை-2டேபிள்ஸ்பூன்
  உப்பு -தேவையான அளவு

  upma

  செய்முறை
  காய்கறி கலவைக்காக கேரட், பீன்ஸ், குடை மிளகாய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இப்போது நறுக்கி வைத்துள்ள காய்கறி கலவை, உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி,  சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவேண்டும். பின்பு வரகு அரிசி சேர்த்து கிளறி விட வேண்டும். மிதமான தீயில் 15 நிமிடங்கள் வெந்த பின்னர் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு கொத்துமல்லித் தழையை மேலே தூவி விட்டு  சூடாக சாப்பிட ஆரோக்கியத்துடன் சுவையும் அபாரம். உப்புமாவே வேண்டாம் என்பவர்கள் கூட வரகரிசி உப்புமாவை விரும்பி சாப்பிடுவார்கள்.