பற்களின் மஞ்சள் கறையை ஒரே நாளில் வீட்டிலேயே நீக்கிடலாம்…!

  0
  8
  பற்கள்

  வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்’ன்னு பெரியவங்க சொல்லி வைச்சிருக்கிறதுல ஒரு சூட்சுமமும் இருக்கு. நாம அப்படி வாய்விட்டு சிரிக்கும் போது முகத்தில் சுமார் 17 தசைகள் வரை இயங்குகிறது. இவை தான் முகத்திற்கு இரத்த ஓட்டத்தை முழுவதுமாக கொண்டு செல்கிறது. அப்படி சீரான ரத்தஓட்டம் இருந்தால் தான் முகம் பார்ப்பதற்கு எப்போது பளீச் என்று இருக்கும். உங்களுக்கு தெரிந்தவர்களின் லிஸ்ட்ல கொஞ்சம் யோசிச்சு பாருங்க…

  வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்’ன்னு பெரியவங்க சொல்லி வைச்சிருக்கிறதுல ஒரு சூட்சுமமும் இருக்கு. நாம அப்படி வாய்விட்டு சிரிக்கும் போது முகத்தில் சுமார் 17 தசைகள் வரை இயங்குகிறது. இவை தான் முகத்திற்கு இரத்த ஓட்டத்தை முழுவதுமாக கொண்டு செல்கிறது. அப்படி சீரான ரத்தஓட்டம் இருந்தால் தான் முகம் பார்ப்பதற்கு எப்போது பளீச் என்று இருக்கும். உங்களுக்கு தெரிந்தவர்களின் லிஸ்ட்ல கொஞ்சம் யோசிச்சு பாருங்க… அந்த லிஸ்ட்ல யாரெல்லாம் எப்பவுமே பளீச்சுன்னு இருக்காங்கன்னு… அவங்க எல்லாருமே பற்கள் தெரிகிற மாதிரி எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறவங்களா தான் இருப்பாங்க.

  yellow teeth

  அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்வாங்க… நம்ம முகம் தான் உடம்போட கண்ணாடி. முறையற்ற உணவுவகைகள், குளிர்பானங்கள், வெற்றிலை பாக்கு மெல்லுவது, ஒழுங்காக பல் துலக்காதது, புகைப்பிடிப்பது, மது என்று பலருக்கும் பற்களில் பிரச்சனைகள் இருக்கிறது. இயல்பாகவே வாய்விட்டு சிரித்தால், நமது பற்களின் மஞ்சள் நிறம் தெரிந்து விடுமோ என்று ஒரு கூச்சம் தொற்றிக் கொள்கிறது.
  கவலையே படாதீங்க… ஒரே நாள்ல உங்கள் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையை எல்லாம் எடுத்துடலாம். அதுவும் வீட்டிலிருந்தப்படியே இதைச் செய்யலாம். பெரிய செலவு எல்லாம் கிடையாது. ஒரேயொரு தக்காளியும், கொஞ்சம் பற்பசையும் போதும். முதலில் ஒரு தக்காளியை எடுத்து அதில் இருந்து சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தக்காளி சாறுடன் பற்பசை சிறிதளவு சேர்த்துக் கொண்டு, நன்றாக நுரை வரும் வரை மிக்ஸ் செய்யுங்கள். இப்போது இந்தக் கலவையை பிரஷ் ஒன்றில் தொட்டு வழக்கம் போல எல்லா பற்களிலும், பற்களின் பின்புறமும் நன்றாக மேலும் கீழுமாக பிரஷ் செய்யுங்கள். அடுத்த அஞ்சாவது நிமிஷம் உங்களுடைய பற்கள் எல்லாம் பளிச்சென்று வெள்ளை நிறத்திற்கு மாறி விட இது உதவும். ரொம்ப அதிகளவில் பற்களில் மஞ்சள் கறை உள்ளவர்கள் இப்படி தொடர்ந்து ஒரு வாரம் செய்யலாம். அதற்குள்ளாகவே பளிச்சென்று பாலீஷ் செய்த பச்சரிசி மாதிரி உங்கள் பற்கள் மாறிடும்.