பறிபோகிறது முதல்வர் பதவி… ஆத்திரத்தில் அமித் ஷா… நாராயணா… நாராயணா..!

  0
  8
  அமித் ஷா

  புதுச்சேரியில் நேற்று புதிய பேருந்து நிலையம் அருகில் முஸ்லிம் அமைப்புகள் சார்பாக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் புதுவை முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார். அதில் தேசிய குடியுரிமை சட்டத்தை புதுச்சேரியில் உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லை என்றால் ஆட்சி கலைக்கப்படும் என்று மத்திய ஆட்சியாளர்கள் எனக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறினார்.Modi

  ஆட்சியை கவிழ்ந்தாலும் தேசிய குடியுரிமை சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அதிரும் அளவிற்கு பேசி அங்கிருந்த முஸ்லிம் சமுதாயத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் நாராயணசாமி. மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் நாராயணசாமி மக்களை ஏமாற்றுகிறார் என்று அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர். அதாவது புதுச்சேரி என்பது மாநில அந்தஸ்து கிடையாது. ஒரு யூனியன் பிரதேசம். மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மத்திய அரசால் கொண்டு வரப்படும் எந்த சட்டத்தையும் அமல்படுத்துவதற்கு யூனியன் பிரதேச அரசை கேட்க வேண்டியதில்லை.Narayanasamy

  ஏனென்றால் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கீழ் வருவதால் நேரடியாக சட்டத்தை அமல்படுத்தலாம். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதலமைச்சர் என்பதால் இது போல் பேசி அக்கட்சியின் தலைமையிடம் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பேசி வருவதாக புதுச்சேரி பாஜகவினர் நாராயணசாமியை கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கண்டுபிடிக்கும் முதல் அமைச்சர் நாராயணசாமியும் அதிகார மோதல் காரணமாக எந்த திட்டமும் சரியாக செயல்படுத்தாமல் கிடப்பில் கிடக்கிறது.amit shah

  இந்த சூழ்நிலையில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு போர்க்கொடி காட்டினால் நாராயணசாமிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா விரைவில் தனது ஆட்டத்தை காட்டுவார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால் புதுச்சேரி காங்கிரஸ் அமித் ஷாவின் பார்வை நம் மீது பட்டுவிடக்கூடாது என பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர்.