பர்த்டே பார்ட்டிக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்: உடந்தையாக இருந்த நண்பர்கள் போக்சாவில் கைது!

  0
  1
  Sexual harassment

  பூங்காவிற்கு கடந்த 26 ஆம் தேதி மாலை, 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தனது நண்பர்கள் 4 பேருடன் பிறந்த நாள் விழா கொண்டாட சென்றுள்ளார்.

  கோவை மாவட்டம், கீரநாயக்கன்பாளையம் என்னும் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா நகரில் பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவிற்கு கடந்த 26 ஆம் தேதி மாலை, 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தனது நண்பர்கள் 4 பேருடன் பிறந்த நாள் விழா கொண்டாட சென்றுள்ளார். பிறந்த நாள் கொண்டாடி முடிக்க இரவு நேரம் ஆகியுள்ளது. இரவு நேரம் என்பதால் அந்த மாணவியை அங்கிருந்த மணிகண்டன் என்பவர் பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி செய்துள்ளார். 

  rape

  அந்த மாணவி கூச்சலிட்டும் அவளின் நண்பர்கள் யாரும் அதனை தடுக்காமல் அதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். அதனால், மணிகண்டன் தொடர்ந்து அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதனை மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் அந்த மாணவியின் நண்பர்களான ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன் மற்றும் நாராயண மூர்த்தியை முதல் கட்டமாக போக்சாவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் வீடியோ எடுத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.