பர்கர் பிரியரா நீங்க? அப்போ பர்கர் சாப்பிடுறதுக்கு முன்னாடி இந்த செய்தியை பாருங்க!

  0
  9
  பர்கர்

  பர்கர் சாப்பிட்ட ஒருவர் அதனுள் இருந்த கண்ணாடித்துண்டுகளால்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  புனே: பர்கர் சாப்பிட்ட ஒருவர் அதனுள் இருந்த கண்ணாடித்துண்டுகளால்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்தவர்  சஜித் பதான்.  ஆட்டோ ஓட்டுநரான  இவர் கடந்த 18 ஆம்  தேதி நண்பர்களுடன் சேர்ந்து பிரபல  பிரபல பர்கர் கிங் கடைக்குச் சென்றுள்ளார்.  அப்போது பர்கரை ஆர்டர் செய்த இவர்கள் பேசிக் கொண்டே ஜாலியாக பர்கர் சாப்பிட ஆரம்பித்துள்ளனர். அப்போது சஜித் பதானின் தொண்டைக்குள் ஏதோ சிக்கவே வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அவரது வாயிலிருந்து ரத்தம் கசிந்துள்ளது.

  burger

  இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் பர்கரை சோதனை செய்தபோது அதில் கண்ணாடி துண்டுகள் கிடந்துள்ளது. இதைத் தொடர்ந்து சஜித் பதானை  உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளித்த நிலையில் அவர் உடல்நலம் தேறியுள்ளார். 

  burger

  இதைத் தொடர்ந்து சஜித் பதான் பர்கர் கிங் கடையின் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்துத் தொடர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.