பரோலில் வந்த மும்பை வெடிகுண்டு வழக்கு குற்றவாளி எஸ்கேப்..!?

  0
  3
  ஜலீல் அன்சாரி

  1993-ல் மும்பையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அந்த வழக்கில் கைதானவர்களில் ‘ஜலீல் அன்சாரி’ மிகவும் முக்கியமானவர்.அவருக்கு ‘பாம் டாக்டர்’ என்று செல்லப் பெயர் இட்டிருந்தார்கள்.அந்த அளவுக்கு வெடிகுண்டுத் தொழில் நுட்பத்தில் நிபுணராம் ஜலீல் அன்சாரி. அந்த வழக்கின் விசாரணையில் இந்த வெடி குண்டு டாக்டர், சிமி மற்றும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பல தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டு செய்யப் பயிற்சி அளித்தது தெரியவந்திருக்கிறது.

  jallel

  2008-ல் நடந்த குண்டு வெடிப்புகளின்போது என்.ஐ.ஏ மீண்டும் அவரை விசாரித்தது.இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் சிறைச்சாலையில் இருந்து 21 நாள் பரோலில் விடுவிக்க பட்டார் ஜலீல் அன்சாரி. மோயின்புராவை அடுத்த அகிரிபடாவைச் சேர்ந்த அன்சாரி,அக்ரிபடா காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30-லிருந்து 12 மணிக்குள் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து இருந்தது நீதிமன்றம். 

  jaleel

  வெள்ளிக்கிழமையன்று ஆஜ்மீர் சிறையில் ஆஜராக வேண்டிய நிலையில் வியாழக்கிழமை அவரைக் காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

  பத்தொன்பது நாட்கள் தினமும் அக்ரிபடா காவல் நிலையம் வந்து கையெழுத்திட்ட ஜலீல் அன்சாரி 20 நாளான வியாழக்கிழமை ஸ்டேசனில் ஆஜராகவில்லை.அதற்கு பதிலாக அவரது மகன் ஜாயித் அன்சாரி காவல் நிலையத்திற்கு வந்து தனது தந்தையை காணவில்லை என்று புகார் செய்திருக்கிறார்.அவரை விசாரித்தபோது,அதிகாலையில் எழுந்து நமாஸ் செய்யப் போவதாகச் சொல்லிச் சென்ற ஜலீல் அன்சாரி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். 

  mumbai

  இதைத்தொடர்ந்து, மும்பை போலீசார்,தீவிரவாத தடுப்பு ஏடிஎஸ் பிரிவு,என்.ஐ.ஏ என்று பல ஏஜன்சிகளும் களமிறங்கி ஜலீல் அன்சாரி என்கிற 68 வயது வெடிகுண்டு டாக்டரை தேடி வருகிறார்கள்.