பருப்பு, சமையல் எண்ணெய் பதுக்கினால் கடும் நடவடிக்கை…..மத்திய அரசு எச்சரிக்கை

  0
  2
  rain-3

  வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் மகாராஷ்ரா, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய சப்ளை நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது. இதனையடுத்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் வெங்காய விலை உயர்வு குறித்து கண்காணிக்க தொடங்கியது. மேலும், சப்ளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் வெங்காய சப்ளையை அதிகரிக்க பப்பர் கையிருப்பிலிருந்து வெங்காயம் சப்ளை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

  இந்நிலையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் டிவிட்டரில், கடந்த சில நாட்களாக பருப்புகள், சமையல் எண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. பதுக்கல்காரர்கள் செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்தியதே இதற்கு காரணம். அரசு அவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கும். பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் போதுமான அளவில் மத்திய அரசிடம் கையிருப்பு உள்ளது. என பதிவு செய்து இருந்தார்.

  பொருளாதார மந்த நிலைக்கு மத்திய அரசுதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், வெங்காயம், பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருவது மத்திய அரசு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.