பரபரப்பு மிக்க ‘பீச்’ சாலையில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை !

  0
  5
  beech road

  தடையை மீறி அந்த சாலையில் நுழையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  லண்டனில் உள்ள பார்பிகன் எஸ்டேட்டில் உள்ள பீச் சாலையில் கடுமையான காற்று மாசு உருவாகியுள்ளது. அதனால் அங்கு பெட்ரோல், டீசலில் செல்லும் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி, அந்த சாலையில் பாதசாரிகள், சைக்கிள்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மட்டுமே இயக்க முடியும். அந்த சாலையில் நுழையும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை அங்குப் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமெராக்களின் மூலம் கண்காணித்து, அவை விதிமுறைகளுக்கு உட்பட்ட வாகனங்களா என்று கண்டறியப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

  ttn

  தடையை மீறி அந்த சாலையில் நுழையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அபராத தொகையை 2 வாரங்களுக்குள் செலுத்துபவர்களுக்கு அபராதத் தொகை 6,000 ரூபாயாகக் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளில் இருந்து அவசர ஊர்திகளுக்கும், குப்பை வண்டிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் தற்காலிகமாகச் சோதனை முறையில் 18 மாதங்கள்(ஒன்றரை வருடம்) வரை செயல்படுத்தப்படும் என்றும் இந்த சோதனை வெற்றி அடைந்தால் நிரந்தரமாக அமல்படுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.