பரங்கிக்காய் கூட்டு

  0
  3
  பரங்கிக்காய் கூட்டு

  உணவே மருந்து என்ற பழமொழியை படித்திருப்பீர்கள். உணவு என்பது வெறும் சுவைக்காக மட்டுமானது அல்ல.

  உணவே மருந்து என்ற பழமொழியை படித்திருப்பீர்கள். உணவு என்பது வெறும் சுவைக்காக மட்டுமானது அல்ல. உணவுகளை பொறுத்தவரையில் அதற்கேற்றார்போல் அதில் மருத்துவக்குணங்களும் உள்ளது. அப்படி மருத்துவ குணம் கொண்ட உணவு பொருள்தான் பரங்கிக்காய். இதில்  காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் என்ற உட்பொருள் உள்ளதால்  உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து உதவிடும். மேலும் நீர்சத்து அதிகமாக இருப்பதால், உங்கள் உடல் எடையை வாக்கிங் போகாமலே நீங்கள் எளிதாக குறைத்து விடலாம். 

  பரங்கிக்காய் கூட்டு

  தேவையான பொருட்கள்: 

  பரங்கிக்காய் – 250 கிராம் 
  தேங்காய் பூ – 100 கிராம் 
  சாம்பார் தூள்- 1 டீஸ்பூன் 
  மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன் 
  எண்ணெய்- 1 டீஸ்பூன் 
  உப்பு- தேவையான அளவு 

  தாளிக்க: 

  உ.பருப்பு- 2
  வரமிளகாய்- 2

  செய்முறை:

  பரங்கிக்காய் கூட்டு

  பரங்கிக்காயை துண்டங்களாக்கி, அளவாக தண்ணீர் ஊற்றி, வேகவிட்டு, சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கெட்டியாக கொதிக்கவிடவும். பின்பு அதில் தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்க விடவும். கடைசியில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு, உ.பருப்பு, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். 

  சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் அவ்வளவு பிரேமதாமாக இருக்கும். 

  இதையும் படிங்க: கத்திரிக்காய் சட்னி