பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழப்பு?!: மறுக்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு!

  0
  2
  பயங்கரவாதி மசூத் அசார்

  பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழக்கவில்லை என்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தெரிவித்துள்ளது.

  இஸ்லாமாபாத்: பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழக்கவில்லை என்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தெரிவித்துள்ளது.

  கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றது.  

  azar ttn

  இதைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை சரமாரியாகக் குண்டுகளை வீசியது. இந்தத் தாக்குதலில் பயங்கரவாத முகாமிலிருந்த சுமார் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தாக்குதலை உறுதிப்படுத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பு, இதில் யாரும் பலியாகவில்லை என்று மறுத்திருந்தது.

  azar ttn

  இந்நிலையில் இந்திய விமானப்படை தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் உயிரிழந்துவிட்டதாக நேற்று தகவல்கள்  வெளியாயின. ஆனால்  இந்த தகவலை ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு மறுத்துள்ளது. அவன் நலமாக உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மசூத் அசார் உடல் நிலை சரியில்லாமல் ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த மருத்துவமனையிலிருந்து மசூத் அசாரை பகவால்பூரில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று மாலை 7.30 மணியளவில் மாற்றியுள்ளனர். இதை வைத்து அவர் மரணமடைந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளதாகக்  கூறப்படுகிறது.