பப்ஜி விளையாட மொபைல் வாங்கித் தராததால் மும்பை இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

  0
  6
  pubg

  பப்ஜி கேம் விளையாட மொபைல் வாங்கித் தராததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

  மும்பை: பப்ஜி கேம் விளையாட மொபைல் வாங்கித் தராததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

  மும்பையில் நேரு நகரில் உள்ள 18 வயதுடைய வாலிபர் ஒருவர் தனது தாய், அண்ணன், அண்ணி மற்றும் அவர்களது குழந்தையுடன் வசித்து வந்தார். தீவிர பப்ஜி கேம் ரசிகரான அவர், நல்ல க்ராஃபிக்ஸில் எந்த வித சிக்கலும் இன்றி பப்ஜி கேமை ஆட நினைத்தார்.இதனால் 37,000 ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த மொபைல் ஒன்றை வாங்கித் தருமாறு தனது அண்ணனிடம் கேட்டுள்ளார்.

  pubg

  ஆனால் அதிகபட்சம் 20,000 மதிப்பிலான மொபைலைத்தான் வாங்கித்தர முடியும் என அவரது அண்ணன் கூறியுள்ளார்.இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.மிகுந்த கோபத்தில் இருந்த இளைஞர் காலையில் சரி ஆகி விடுவான் என எண்ணிய இளைஞரின் அண்ணன் தூங்க சென்று விட்டார். கடும் ஆத்திரத்தில் இருந்த இளைஞர் மீண்டும் பப்ஜி ஆடிக்கொண்டிருந்தார்.

  pubg

  இந்நிலையில் அதிகாலையில் கழிவறை செல்ல எழுந்த அண்ணன் தம்பி சமையலறையின் ஃபேனில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  pubg

  மேலும் சமீபத்தில் பப்ஜி விளையாட்டை தடை செய்யுமாறு 11 வயது மாணவன் ஒருவன, தனது தாயின் உதவியோடு மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.