பன்னீர்செல்வத்தை திட்டியதைவிட அதிகமாக டிடிவியை திட்டும் தங்க.தமிழ்ச்செல்வன்!

  0
  1
  Thanga.Tamilselvan

  டிடிவியின் உதவியாளர் என நம்ப்பபடும் ஒருவருக்கு, தங்க.தமிழ்ச்செல்வன் என நம்பப்படும் குரல், தொலைபேசியில் அழைத்து காட்டமாக பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளில் டிடிவியை விமர்சிக்கும் தங்கம், தான் விஸ்வரூபம் எடுத்தால் அமமுக என்ற கட்சியே இருக்காது என்றும் எச்சரிக்கை விடுக்கிறார் அந்த அழைப்பில்.

  சசிகலா சிறை சென்றபிறகு, அதிமுக‌ தினகரன் கட்டுப்பட்டில் இருந்து மெல்ல விடுபட்டதும், பின்னர் தினகரன் தனிக்கட்சி தொடங்கியபோதும்கூட, அமமுகவின் மிக முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக தங்க. தமிழ்ச்செல்வன் இருந்துவந்தார். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்ததும், அக்கட்சிக்கான எதிர்காலம் கேள்விகுறியானதை அறிந்த தங்கத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. தாய்க்கழகத்துக்கு தாவப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. இருந்தாலும், தங்கத்தை டிடிவி சந்தேக கண்கொண்டே பார்த்துவந்திருக்கிறார்.

  TTV with Tamilselvan

  தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசிக்கவும், கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து விவாதிக்கவும் ஒவ்வொரு மாவட்டமாக டிடிவி பயணித்து வருகிறார். தேனி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் மேற்படி ஆலோசனை கூட்டத்திற்கு தங்க.தமிழ்ச்செல்வனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிகிறது.

  TTV

  இந்நிலையில், டிடிவியின் உதவியாளர் என நம்ப்பபடும் ஒருவருக்கு, தங்க.தமிழ்ச்செல்வன் என நம்பப்படும் குரல், தொலைபேசியில் அழைத்து காட்டமாக பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளில் டிடிவியை விமர்சிக்கும் தங்கம், தான் விஸ்வரூபம் எடுத்தால் அமமுக என்ற கட்சியே இருக்காது என்றும் எச்சரிக்கை விடுக்கிறார் அந்த அழைப்பில். தங்க.தமிழ்ச்செல்வனால் அல்லது டிடிவியால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அமமுகவில் புயலுடன் கூடிய கடும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது!