பனை ஓலைக் கொழுக்கட்டை | விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

  14
  201708231438010750_therali-kozhukattai_SECVPF

  விநாயகர் சதுர்த்தியின் ஸ்பெஷல் பலகாரமே கொழுக்கட்டைத் தானே? முழு முதற் கடவுளாம் விநாயகருக்கு மட்டுமல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்த பலகாரம் கொழுக்கட்டை. தும்பைப்பூ நிறத்தில் வெளியேயும், பொன்னிறத்தில் உள்ளே பூரணத்தின் தித்திக்கும் தேன் சுவையும் சேர்த்து விநாயகருக்கு படைத்து அருள் பெற சத்தான சுவையான விதவிதமான கொழுக்கட்டைகளின் செய்முறைகளைப் பார்ப்போம்.

  kozhukattai

  தேவையான பொருட்கள்
  சிவப்புப் பச்சரிசி -1கப்
  வெல்லம் அல்லது கருப்பட்டி    – 1கப்
  தேங்காய் -1/2 மூடி
  ஏலக்காய் -2
  சுக்கு -சிறு துண்டு
  பனை ஓலைகள்
  செய்முறை
  சிவப்புப் பச்சரிசியை சுத்தம் செய்து நன்றாக கழுவி,  2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  பின்னர், தண்ணீரை நன்கு வடித்து வெள்ளைத்துணியில்  விரித்து அரிசியை உலர விட வேண்டும். நன்கு உலர்ந்ததும், அரிசியை மாவாக பொடித்து சலித்துக் கொள்ள வேண்டும். மாவில் துருவிய தேங்காய், சுக்கு, ஏலக்காய்ப்பொடி, தூளாக்கிய கருப்பட்டி சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கட்டியில்லாமல் பிசைந்து கொள்ள வேண்டும்.

  kozhukattai

  பனை ஓலைகளை நீள வாக்கில் சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மடிப்புப் பகுதியில் மாவை வைத்து பனை ஓலைகளை மூட வேண்டும். மற்றொரு பனை ஓலையால் மூடி நாரில் கட்டி விட வேண்டும். கொழுக்கட்டை வேக வைக்கும் பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீரில் சில இலைகளை வாசத்திற்காகப் போடலாம். கொழுக்கட்டைகளை நன்றாக  வேக விட்டு எடுக்க வேண்டும். இந்த பாரம்பரிய, சத்தான கொழுக்கட்டைகள் மூன்று நாள் வரை பனை ஓலை வாசத்துடனும், சுவை மாறாமலும் இருக்கும்.