பத்திரிக்கையாளர்களுக்கு பயந்து மெட்ரோவில் பயணம் செய்த ரஜினிகாந்த்! 

  0
  2
  ரஜினிகாந்த்

  நாளை தர்பார் படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

  நாளை தர்பார் படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

  இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல்  விருந்தாக நாளை  தமிழகத்தில் வெளியாகவுள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களிலும்,  இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களிலும் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள்  உற்சாகத்துடன் உள்ளனர். இந்நிலையில் இயக்குநர் சிவா இயக்கத்தில் நடித்து வரும் ரஜினியின் தலைவர் 168 படப்பிடிப்பு  ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை வெளியாகவுள்ள தர்பார் படத்தை குடும்பத்துடன் காண நடிகர் ரஜினிகாந்த்  ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பியுள்ளார். 

  Rajinikanth

  இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் பேட்டியை தவிர்த்துவிட்டு மெட்ரோ ரயிலில் தனது வீட்டிற்கு சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சாலை வழியாக காரில் சென்றால் காரையும் துரத்திக்கொண்டு பத்திரிக்கையாளர்கள் வருவதால் அவர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த ரஜினியுடன் சிலர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.