பத்திரிக்கையாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் ஊடுருவல்! இஸ்ரேல் நிறுவனம் மீது வாட்ஸ் அப் புகார்!! 

  0
  10
  Whats App

  இந்தியாவிலுள்ள பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களை குறிவைத்து அவர்களின் வாட்ஸ் அப் செயலியை இஸ்ரேலை சேர்ந்த உளவுத்துறை நிறுவனம் வேவு பார்ப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. 

  இந்தியாவிலுள்ள பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களை குறிவைத்து அவர்களின் வாட்ஸ் அப் செயலியை இஸ்ரேலை சேர்ந்த உளவுத்துறை நிறுவனம் வேவு பார்ப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. 

  இஸ்ரேலை சேர்ந்த NSO என்ற சைபர் கண்காணிப்பு நிறுவனம், இந்தியாவில் மக்களவை தேர்தல் நடந்த சமயத்தில் அதாவது மே மாதம் இந்தியாவிலுள்ள முக்கிய பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வாட்ஸ் அப்களை ஊடுருவி வேவு பார்த்துள்ளது. மிஸ்ட் கால் மூலம் ஸ்பைவேர் என்ற வைரஸ் மூலம் ஸ்மார்ட்போன்களை ஊடுருவி வாட்ஸ் அப்பில் வேவு பார்த்திருப்பதை வாட்ஸ் அப் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆனால் யார் யாரெல்லாம் உளவு பார்க்கப்பட்டார்கள், எத்தனை பேர் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பயனர்களை தொடர்புகொண்டு அவர்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

  Whats app

  பயனர்களின் அனுமதியின்றி வாட்ஸ் அப்பை ஊடுருவியதற்காக வாட்ஸ் அப் நிறுவனம் இஸ்ரேல் நிறுவனத்தின் மீது  சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இதையடுத்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் ஊடுருவியது தொடர்பாக நவம்பர் 4 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளது.