பத்திரிகையாளர் பிரம் காஞ்சிபோட்லா இறப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிப்பு

  0
  6
  Indian-American journalist

  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரம் காஞ்சிபோட்லா என்ற பத்திரிகையாளர் இறப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  டெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரம் காஞ்சிபோட்லா என்ற பத்திரிகையாளர் இறப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரம் காஞ்சிபோட்லா என்ற பத்திரிகையாளர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நியூயார்க்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார். முன்னதாக அவர் யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்தில் பணி புரிந்தார்.

  இந்நிலையில் பிரம் காஞ்சிபோட்லா இறப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்திய-அமெரிக்க பத்திரிகையாளர் பிரம் காஞ்சிபோட்லா இறப்பு ஆழ்ந்த வேதனையை அளித்தது. அவர் செய்த சிறந்த பணி மற்றும் இந்தியாவையும், அமெரிக்காவையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.