பதவி இழந்த அமைச்சர்…. சபாநாயகருடன் அரசு கொறடா சந்திப்பு

  0
  1
  rajeenderan

  பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை இழந்திருக்கும் சூழலில் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்தார்.

  சென்னை: பொது சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை இழந்திருக்கும் சூழலில் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்தார்.

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கடந்த 1998-ம் ஆண்டு கள்ளச்சாரயம் வியாபாரத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்தியதாக அப்போது பாஜகவில் இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஒசூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது. 

  இந்த வழக்கை நேற்று விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ 10,500 அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. இதனையடுத்து பாலகிருஷ்ணா ரெட்டி தனது விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதலாக இந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், தமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பதவி விலகியதை அடுத்து அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினார்.