பண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்?

  0
  1
  ttn-daily-rasi-palan

  daily rasipalan toptamilnews

  இன்றைய ராசிபலன்
  15.0919 (ஞாயிற்றுக்கிழமை)
  நல்ல நேரம் 
  காலை 7.30 மணி முதல்  8.30 வரை
  மதியம் 2 மணி முதல் 3 வரை
  ராகு காலம் 
  மாலை 4.30 மணி முதல் 6 வரை
  எமகண்டம் 
  பிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை
  சந்திராஷ்டமம் 
  சிம்மம்
  பரிகாரம்
  வெல்லம்
  மேஷம்
  சமீபத்திய நிகழ்வுகளால் மனம் பாதிக்கப்படும். தியானமும் யோகாவும் ஆன்மிக மற்றும் உடல் சார்ந்த ஆதாயங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். அவசியமானவற்றை மட்டும் இன்று வாங்குங்கள். வீட்டில் சடங்குகள் அல்லது புனிதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
  அதிர்ஷ்ட எண்: 3
  ரிஷபம் 
  உங்களின் பர்சனாலிட்டி வாசனை திரவியம் போல இன்று செயல்படும். பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்வது நீண்டகால லாபம் தரும். தபாலில் வரும் ஒரு கடிதம் ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும். உங்கள் நண்பரை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்திக்கப் போகிறோம் என்ன எண்ணம், இதயத் துடிப்பை அதிகரிக்கும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். 
  அதிர்ஷ்ட எண்: 2
  மிதுனம் 
  குழந்தைகளுடன் விளையாடுவது அற்புதமான குணப்படுத்தும் அனுபவத்தைத் தரும். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது – ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்திருந்தால் பொழுதுபோக்கு மகிழ்வாக இருக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!
  அதிர்ஷ்ட எண்: 9
  கடகம் 
  விசேஷமான பிரிவைச் சேர்ந்த எதற்கும் நிதி உதவி அளிக்க முக்கிய நபர்கள் தயாராக இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மனதிற்கு இனியவரை காணலாம். இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக மற்றும் வரமாக அமையும்.
  அதிர்ஷ்ட எண்: 3
  சிம்மம் 
   வளமை வராமல் தள்ளிப்போனாலும், பிரிவாற்றாமை அதை வலுப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கமிஷன்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். வீட்டில் சில மாற்றங்கள் அதிக சென்டிமெண்டாக அமையும். ரொமான்ஸ் ஆனந்தமாக அதிக உற்சாகமாக இருக்கும். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வு இனிமையாக, குதூகலமாக மற்றும் வரமாக அமையும்.
  அதிர்ஷ்ட எண்: 2
  கன்னி 
  இன்று மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம். குடும்பத்தினருடன் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைவதன் மூலம் உங்கள் லட்சியங்களை எளிதில் அடைவீர்கள். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். இன்று உங்களுக்கான கிரகநிலைகள் சரியில்லாததால் நீங்கள் சலிப்படைய கூடும். 
  அதிர்ஷ்ட எண்: 9
  துலாம் 
  அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். குடும்பத்தில் மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். உறவையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு தொடர்ச்சியாக சண்டை வரும். இருந்தாலும் அவ்வளவு எளிதாக விட்டுவிடாதீர்கள். 
  அதிர்ஷ்ட எண்: 3
  விருச்சிகம் 
  உடலில் சேரும் கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். செலவுகள் அதிகமாகும், ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். குழு செயல்பாடுகளில் ஈடுபட்டால் புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். சிறந்த நடத்தையை பின்பற்றுங்கள். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. இன்று உங்கள் துணையால் இழப்பு ஏற்படலாம். 
  அதிர்ஷ்ட எண்: 4
  தனுசு 
  முடியுமானால் நீண்டதூர பயணத்தை தவிர்த்திடுங்கள். நீங்கள் பலவீனமாக இருப்பதால், பயணம் மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும். பண லாபத்தைத் தரும் அறிவுப்பூர்வமான புதிய ஐடியாக்கள் சொல்வீர்கள். தூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத தகவல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். உங்கள் அன்புக்குரியவருக்கு உங்களின் நீடித்த காதல் ஆறு போல இருக்கும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும்.
  அதிர்ஷ்ட எண்: 1
  மகரம் 
  இன்று நம்பிக்கை எனும் மந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள்.  உங்கள் தைரியத்தால் காதலில் வெற்றி பெறுவீர்கள். தொடர்புகொள்ளும் திறனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று, உங்கள் துணையுடன் இன்பமாக மாலை பொழுதை கழிப்பீர்கள். 
  அதிர்ஷ்ட எண்: 1
  கும்பம் 
  மாலை நேரம் பதற்றம் நிறைந்ததாக உணர்வுகளின் கலப்பாக இருக்கும். ஆனால் கவலைப்பட ஏதும் இல்லை. ஏனெனில் ஏமாற்றத்தைவிட மகிழ்ச்சி அதிக ஆனந்தம் தரும். வேகமாக முடிவு எடுக்காதீர்கள். குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும் போது. வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். ஒருவர் உங்களைப் பாராட்டுவார். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். திருமண வாழ்க்கையில் ஒரு கடினமான அத்தியாயத்தை சந்தித்த பின் இன்று உங்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும். 
  அதிர்ஷ்ட எண்: 8
  மீனம் 
  இன்று உங்களை சென்டிமென்டல் மனநிலை ஆக்கிரமித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் கடந்த காலத்தை மறக்க வேண்டும். நுட்பங்களை சரியாகக் கையாண்டால் இன்று கூடுதல் பணம் சம்பாதிப்பீர்கள். வீட்டு வேலைகளை முடிக்க பிள்ளைகள் உதவி செய்வார்கள். நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள். எதிர்பாலினரை எளிதாக கவர்வீர்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார்.
  அதிர்ஷ்ட எண்: 6