பண மழை பொழியும் 9 தொகுதிகள்; எடப்பாடி பழனிசாமி உத்தரவு?!

  0
  10
  எடப்பாடி பழனிசாமி

  மக்களவை தேர்தல் வேலைகள் ஒருபுறம் இருக்க, அதிமுக தரப்பு இடைத்தேர்தல் வேலைகளில் தீவிரம்காட்ட துவங்கியுள்ளது

  மக்களவை தேர்தல் வேலைகள் ஒருபுறம் இருக்க, அதிமுக தரப்பு இடைத்தேர்தல் வேலைகளில் தீவிரம்காட்ட துவங்கியுள்ளது. அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ள அதிமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. அதனால் ஜெயிப்பதற்காக அதிமுக தரப்பு பணத்தை வாரி இறைக்கவுள்ளது!

  114 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்தது அதிமுக தரப்பு, சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் நேற்று காலமானார். தற்போது 113 எம்.எல்.ஏக்கள் மட்டுமே அதிமுக பக்கம் உள்ளனர். இதில் தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் அதிமுகவுக்கு எதிராக உள்ளனர். இன்னும் 3 எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

  தமீமுன் அன்சாரி – கருணாஸ்

  thamimun ansari

  அதிமுக பக்கம் ஸ்ட்ராங்காக இருப்பது 108 எம்.எல்.ஏக்கள் மட்டும்தான், பெரும்பான்மையை நிரூபிக்க 116 எம்.எல்.ஏக்கள் தேவை.மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் அதிமுகவுக்கு பிரச்சனையில்லை, இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால்தான் அதிமுக அதிகாரத்தை பிடிக்க முடியும். அதனால் இடைத்தேர்தலில் 9 தொகுதிகளை டார்கெட் செய்து நிச்சயமாக வெற்றிபெற வேண்டும் என அதிமுக தரப்பு முடிவு செய்துள்ளது.

  ​​edapadi palanisamy

  இடைத்தேர்தல் நடைபெற உள்ள 18 தொகுதிகளில் 9 தொகுதிகள் வடமாவட்டம் மற்றும் கொங்கு பெல்ட்டில் வருகிறது. பிற தொகுதிகளை விட அதிமுக தரப்புக்கு இந்தப் பகுதியில் ஆதரவு அதிகம், எனவே இந்த 9 தொகுதிகளில் வெற்றிபெற கோடிக்கணக்கில் பணத்தை இறக்கவுள்ளது அதிமுக! அதிகாரம் கைக்கு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம், தேர்தலுக்கு தாராளமாக செலவு செய்து வெற்றிபெற பாருங்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாராம்!

  பணம்

  அதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் பணப்பெட்டியுடன் ரெடியாக இருக்கிறார்கள்! மக்கள் என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.