‘பண்ணை வீட்டில் அழுகிய சடலம்’: விசாரணை வளையத்தில் சிக்கிய பிரபல நடிகை குடும்பம்!

  0
  1
   நடிகர் நாகர்ஜூனா

  நேற்று இந்த வீட்டை பணியாளர்கள் சுத்தம் வந்துள்ளனர். அப்போது வீட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது

  தெலங்கானா: பிரபல நடிகர் நாகர்ஜூனாவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  தெலங்கானாவில்  பாப்பிரெட்டிகுடா என்ற கிராமம் உள்ளது. இங்கு நடிகர் நாகர்ஜூனாவுக்குச் சொந்தமான  பண்ணை வீடு உள்ளது. சுமார் 40 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த பண்ணை வீடு  நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இல்லை. இருப்பினும் அதை அவ்வப்போது  வேலையாட்கள்  வந்து சுத்தம் செய்துவிட்டுப் போவது வழக்கம். 

  nagarjuna

  இந்நிலையில் நேற்று இந்த வீட்டை பணியாளர்கள் சுத்தம் வந்துள்ளனர். அப்போது வீட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அங்கு சென்று பார்த்த போது அங்கு அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக கேஷாம்பேட் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

  murder

  இதையடுத்து மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றியதோடு, சந்தேகத்துக்குரிய மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்  செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடிகர் நாகர்ஜூனா  பண்ணை வீட்டுக்கு வந்தது சென்றது தெரியவந்துள்ளது.