பண்ணவாடி பரிசல் துறை… 20 ரூபாயில் லஞ்ச்!

  0
  22
  மீன் வறுவல்

  இருபது ரூபாயில் லஞ்சா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம்.அதிகமில்லை ஜெண்டில் மேன் ஒரு உருண்டை கேப்பைக் களி பத்து ரூபாய்,கூடவே மீன் குழம்பும் தருகிறார்கள். இன்னொரு பத்து ரூபாய் கொடுத்தால் பொரித்த மீன் கிடைக்கும் ,அவ்வளவு சிம்பிள்.

  பண்ணவாடி படகுத்துறை என்பது சேலம்,தருமபுரி மாவட்டங்களின் எல்லையில் இருக்கிறது. மேட்டூர் அணை முழு அளவு நிரம்பும் போது இந்தப் பகுதி முழுகிவிடும்.பரிசல் மற்றும்,படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விடும்

  fish

  பண்ணவாடி படகுத்துறை என்பது சேலம்,தருமபுரி மாவட்டங்களின் எல்லையில் இருக்கிறது. மேட்டூர் அணை முழு அளவு நிரம்பும் போது இந்தப் பகுதி முழுகிவிடும்.பரிசல் மற்றும்,படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விடும்
  தண்ணீர் அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து பிறகு படகுப் போக்குவரத்து அனுமதிக்கப்படும் காலம்தான் இங்கே சீசன்

  fish

  பூலாம்பட்டி போன்ற பக்கத்து கிராமத்திற்கு போகவோ அக்கரையில் இருக்கும் பிரதான சாலையை பிடிக்கவோ விரும்புபவர்கள்,தங்கள் பைக்கோடு படகில்.ஏறிக்கொண்டால் அக்கரையில் கொண்டு போய் விட மோட்டார் படகுகள் இருக்கின்றன.அவை தவிர பெரிய தட்டுப்போன்ற பரிசல்களும் உண்டு.தார்சாலையில் இருந்து படகுத் துறைக்குப் போகும்.மண் சாலையின் இருபுறமும் கூடாரம்.அமைத்து கடை போட்டு இருக்கிறார்கள்.

  food

  இடையிடையே படகுகளும் , பரிசல்களும் நிற்கின்றன.இங்கே பெரும்பாலான கடைகளில் சமைப்பது பரிமாறுவது எல்லாம் பெண்கள்தான்.அங்கேயே ஓரமாக மூன்று கற்களை நிறுத்தி அவர்களே செய்த தாற்காலிக அடுப்புகள் வரிசையாய் நிற்கின்றன.சில வற்றில் பெண்கள் இரட்டை துடுப்புப் போட்டு களி கிளறிக்கொண்டு இருக்கிறார்கள்.கேழ்வரகுக் களியை இந்த ஊரில் ‘ ராய் களி’ என்கிறார்கள்.சில அடுப்புகளில் உங்கள் சுண்டுவிரல்.சைஸ் இருக்கும் மீண்கள் முதல் கையளவுள்ள மீன்கள் வரை பொரிக்கப்பட்டு அடுக்கப்பட்டு இருக்கின்றன. இது தவிர இட்லி தோசையும் உண்டு.20 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்தது எதுவுமே இல்லை.

  food

  ஆங்காங்கே பைக்குகளை நிறுத்திவிட்டு பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்த படியே சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.உங்களுக்கு போரடிதால்,உங்கள் ரசனைக்கும் ,பாக்கெட் கணத்துக்கும் ஏற்ற ஒரு பரிசலையோ படகையோ அமர்த்திக்கொண்டு மேட்டூர் அணைத் தணீரில்.ஒரு ரவுண்டு போய் வரலாம்.

  food

  சாப்பிட மட்டுமல்ல , வீட்டுக்கு மீன் வாங்கிப் போகவும் ஏற்ற இடம்.அணை நீரில் வலை வீசி பிடித்துவந்த மீன்களை அவர்களே சுத்தம் செய்து தருகிறார்கள். விலை மிகவும் குறைவாக இருக்கிறது. இந்தப் பகுதியில் விரும்பி உண்ணப்படும் நெய்மீன்,கட்லா,ரோகு,ஜிலேபி எல்லாம் உயிரோடு துடிக்கத் துடிக்க பிடித்துக் கொண்டு  வந்து விற்கிறார்கள்.

  அடுத்த முறை இந்தப் பகுதிக்கு வரும்போது அவசியம் ருசி பார்க்க மறந்து விடாதீர்கள்.