பணத்தை திருடியதாக ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை!

  0
  5
  கொலை

  பணத்தை திருடியதாக ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை செய்துவிட்டு காரப்பாக்கம் அருகே உள்ள ஓடையில் வீசிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். 

  பணத்தை திருடியதாக ஆட்டோ ஓட்டுநர் அடித்து கொலை செய்துவிட்டு காரப்பாக்கம் அருகே உள்ள ஓடையில் வீசிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். 

  சென்னை துரைப்பாக்கம், பாண்டியன் நகர், பாவலன் தெருவை சேர்ந்தவர் தேவகுமார்(23). இவர் உபர் ஈட்ஸ் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலையும், ஆட்டோ ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகிறார். கடந்த 15ஆம் தேதியன்று வீட்டில் இருந்த தேவகுமாரை அவரது நண்பர் அஜித் என்பவர் வந்து அழைத்து சென்றார். அன்று முதல் தேவகுமாரை காணவில்லை. 

  Murder

  இது தொடர்பாக தேவகுமாரின் மனைவி பாஞ்சாலி துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவரது நண்பர்களை அழைத்து விசாரணை செய்ததில் அவர்கள் 4000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை முத்தமிழ் நகர், காரபாக்கத்தில் உள்ள மெக்கானிக் கடையில் காணாமல் போனதாகவும், அதனால் அவர் மீது சந்தேகமடைந்து இரும்பு ராடால் அடித்து கொன்றதாகவும், பின்னர் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு காரபாக்கம் தங்கபாலு கல்லூரி அருகே உள்ள ஓடையின் ஓரத்தில் வீசி சென்றதாகவும் தெரிவித்தனர். 

  அதனடிப்படையில் கோவர்தன்(20), தவன்(19), ஒரு சிறார் ஆகியோர் முன்னிலையில் ஓடையின் ஓரத்தில் இருந்து தேவகுமாரின் எலும்புக்கூடு உடலை மீட்டு எடுத்து பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள அஜித்தை தேடி வருகின்றனர். காணாமல்போன வழக்கு கொலை வழக்காக மாற்றி கண்ணகி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.