பணத்துக்காக பாஜகவுக்கு விட்டுக் கொடுக்கும் அதிமுக அமைச்சர்… ரத்தம் கொதிக்கும் ரரக்கள்..!

  15
  அமைச்சர் வீரமணி

  உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு தள்ளி விட்டுட்டு, நிம்மதியாக இருந்து விடலாம் என அதிமுக அமைச்சர் திட்டம்போட்டுள்ளார்.

  உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு தள்ளி விட்டுட்டு, நிம்மதியாக இருந்து விடலாம் என அதிமுக அமைச்சர் திட்டம்போட்டுள்ளார். 

  வேலுார் மாநகராட்சி மேயர் பதவியை எஸ்.சி., பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். அ.தி.மு.க., சார்பில் இங்கு போட்டியிட நிறைய பேர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான வீரமணியிடம் மனு கொடுத்து இருக்கிறார்கள். veeramani

  ஏற்கனவே, வேலுார் மேயராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கார்த்தியாயினி இருந்தார். தற்போது அவர் பா.ஜ.கவில் மாநில மகளிர் அணி பொறுப்பாளராக இருக்கிறார். இவர் மீண்டும் வேலுார் மேயராக விரும்புகிறார். பா.ஜ.,வும், தங்களுக்கு வேலுார் வேண்டும் எனக் கேட்டு வருகிறது. அமைச்சர் வீரமணி, ‘சொந்தக் கட்சிக்காரர் போட்டியிட்டால் தேர்தல் செலவுகளை நாம தான் செய்யணும்… அதனால் பா.ஜ.,வுக்கு தள்ளி விட்டுட்டு, நிம்மதியா இருக்கலாம்’ என்கிற திட்டத்தில் மேலிடத்துக்கு பரிந்துரை செய்து வருகிறாராம். 

  இதனால், உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள், அதிர்ச்சியில இருக்கிறார்கள். ஏற்கெனவே அமைச்சர் வீரமணி மீது அதிருப்திகள் படையெடுக்கும் நேரத்தில் அவர் இந்த அதிருப்திகளை கண்டு கொள்ளாமல் கடந்து விடுகிறார்.