பணத்திற்காக மனைவியை இன்னொருவரின் காதலியாக பழகவிட்ட இளைஞர்: சிக்கியதோ கடத்தல் வழக்கில்…!?

  0
  1
  கைதான இருவர்

  பண பிரச்னையில் மனைவியை வைத்து இளைஞரைக் கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  சென்னை: பண பிரச்னையில் மனைவியை வைத்து இளைஞரைக் கடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  சென்னையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் இவர் தனது நண்பரான நந்தகுமார் என்பவரிடம் ரூ.34,000 கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து சதீஷ்குமார் வெளிநாட்டுக்குச் சென்றுவிட அவரிடம் நந்தகுமார் தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளார். தாயகம் திரும்பியும் சதீஸ்குமார் பணத்தைத் திருப்பி கொடுக்காததால், நந்தகுமார் இது குறித்து  தனது தம்பி அஜித்குமாரிடம் கூறியுள்ளார்.  இதையடுத்து அஜித் தனது செல்போனை வைத்து சதீஷுக்கு போன் செய்ய அவரை அதை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

  whatsapp

  இதனையடுத்து  பணத்தைத் திருப்பி பெறுவதற்குச் சதித்திட்டம் தீட்டிய அஜித், தனது மனைவி இந்துமதியை அவரது வாட்ஸ் அப் எண் மூலம், சதீஷ்குமாருக்கு குறுந்செய்தி அனுப்பக் கூறியுள்ளார். கணவரின் சொல்படி இந்துமதியும் காதலிப்பது போல் மெசேஜ் செய்துள்ளார். இப்படியே ஒருவார காலம் சென்ற பிறகு  இந்துமதியை சந்திக்கவேண்டும் என்று சதீஷ்குமார் கேட்க,  அவரும் போரூரில் சந்திக்கலாம் எனக் கூறி இருக்கிறார். 

  crime

  திட்டப்படி அஜித்தும் , அவரது நண்பர் ராகுலும் மனைவியின் உதவியுடன் சதீஷ்குமாரை போரூர் வரவழைத்து அங்கிருந்து அவரை கடத்தியுள்ளனர். இதை தொடர்ந்து சதீஷை காணவில்லை என்று போலீசில் அவரது வீட்டார் புகார் கொடுக்க, செல்போன் சிக்னலை வைத்து சதீஷ்குமாரை வேலூரில் போலீசார் பத்திரமாக மீட்டனர். 

  arrest

  மேலும் சதீஷை கடத்திய  அஜித் மற்றும் அவரது நண்பர் ராகுலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அஜித்தின் மனைவி இந்துமதியை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது. 

  இதையும் வாசிக்க: வெடிகுண்டு மிரட்டல்: ஒய்வு பெற்ற  ராணுவவீரர் கைது!