பட்ட பகலிலே ரூ. 50 ஆயிரம் பணத்தை ஆட்டையைப் போட்ட பெண் : கனரா வங்கியில் நடந்த கொள்ளை!

  0
  1
  கொள்ளை

  கனரா வங்கியில் பணம் போடலாம் என்று ரூ.1 லட்சம் எடுத்துக் கொண்டு இன்று காலை சென்றுள்ளார்.

  வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த விஜயா என்பவர், ராஜகோபால் தெருவில் உள்ள கனரா வங்கியில் பணம் போடலாம் என்று ரூ.1 லட்சம் எடுத்துக் கொண்டு இன்று காலை சென்றுள்ளார். முதலில் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்தி விட்டு, பாஸ்புக்கில் அதனைப் பதிவு செய்து கொள்ளாலாம் என்று வரிசையில் நின்று கொண்டிருந்துள்ளார். விஜயா 1 லட்சம் பணம் வைத்திருப்பதை அறிந்த பெண் அவரை பின் தொடர்ந்து வங்கிக்குள் வந்துள்ளார். அதன் பின்னர், வரிசையில் நின்று கொண்டிருந்த விஜயா ஒரு கையில் பாஸ்புக்கையும் மற்றொரு கையில் ஒரு பேக் வைத்திருந்துள்ளார். 

  Vijaya

  விஜயாவின் பின்னாடியே வந்த அந்த பெண், வங்கியில் அத்தனை பேர் இருக்கும் போதே அவர் பேக்கில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை ஆட்டையைப் போட்டுக் கொண்டு சென்றுள்ளார். பையிலிருந்து பணத்தை எடுப்பது கூட தெரியாத விஜயா சிறிது நேரம் கழித்து பையைத் திறந்து பார்த்ததும், பணம் இல்லை என அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

  Vijaya

  அதன் பின், வங்கியில் உள்ள கேமராவில் உள்ள காட்சிகளைச் சோதித்துப் பார்த்ததில் அந்த பெண் திருடிக் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. அதனையடுத்து, விஜயா ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர், திருடிச் சென்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.