பட்டாசுக்கு தடை..! உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்..!?

  0
  2
  உதயநிதி ஸ்டாலின்

  பேனர் கலாசாரத்தை போன்று பட்டாசு வெடித்து வரவேற்பதையும் தவிர்க்க வேண்டும் என்று திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  பட்டாசுகளை பயன்படுத்தி தொண்டர்கள் கட்சியினரை வரவேற்க வேண்டாம் என்று திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  அண்மையில் பேனர் விழந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்ததை அடுத்து அனைத்து கட்சித் தலைவர்களும் தங்களது தொண்டர்களிடம் பேனர் வைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தனர். திமுக
   
  இன்று நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாமில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது  பேசிய அவர்,” பேனர் கலாசாரத்தை போன்று பட்டாசு வெடித்து வரவேற்பதையும் தவிர்க்க வேண்டும்” என்றார்.

  அவரின் இந்த வேண்டுகோளை தொண்டர்கள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.