‘படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா’ : டி.ஆர் ஸ்டைலில் தமிழிசை வாழ்த்து!

  0
  1
  தமிழிசை

  நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

  மத்திய அரசின்  சிறப்பு விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  வாழ்த்து கூறியுள்ளார். 

  திரையுலகில்  சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். 

  rajini

  கோவாவில்  நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.  இதையடுத்து ரஜினிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

   

  இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்ததை வாழ்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது. படையப்பா இன்னும்  பல சாதனைகளை படையப்பா  என வாழ்த்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.