படிக்காத மாணவர்கள் -பணம் வாங்கிய பள்ளி நிர்வாகம் -பரீட்சை எழுதிய பிரின்சிபால் -.

  0
  1
  representative image

  ஹைதராபாத்தை அடுத்த கோல்கொண்டா பகுதியில் இடைநிலை தேர்வுகள் நடைபெற்று வருகின்றன .புதன் கிழமையன்று எட்டு மாணவர்களுக்கு பதிலாக அந்த மாணவர்களின் பரீட்சையினை ஒரு பள்ளியின் முதல்வரும், மூன்று ஆசிரியர்களும் எழுதிக்கொண்டிருந்தனர்.

  ஹைதராபாத் அருகே கோல்கொண்டா நகரில் சில மாணவர்களுக்கு பதிலாக எக்ஸாம் எழுதிய ஒரு பிரின்சிபால் மற்றும் மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர் .

  ஹைதராபாத்தை அடுத்த கோல்கொண்டா பகுதியில் இடைநிலை தேர்வுகள் நடைபெற்று வருகின்றன .புதன் கிழமையன்று எட்டு மாணவர்களுக்கு பதிலாக அந்த மாணவர்களின் பரீட்சையினை ஒரு பள்ளியின் முதல்வரும், மூன்று ஆசிரியர்களும் எழுதிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று உள்ளே வந்த பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டபோது இந்த மோசடி விவகாரம் சிக்கியது.
  கையும் களவுமாக பிடிபட்ட பிரின்சிபால் ஷோயிப் தன்வீர் மற்றும் ஆசிரியர்களான ஷஹீதா, சஹாபா ,சயீத் ஆகியோர் மீது மோசடி வழக்கை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
  மேலும் எட்டு மாணவர்கள்  மீதும் வழக்கு பதிவு செய்து, அதில் நான்கு மாணவர்களை கைது செய்தனர் .இரண்டு மைனர் சிறுவர்களை அவர்களின் பெற்றோர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.