படிக்கட்டில் ஏறும்போது தடுமாறி விழுந்த பிரதமர் மோடி! வைரலாகும் வீடியோ

  13
  Modi

  உத்திர பிரதேச மாநிலத்தில் படிக்கட்டில் ஏறும்போது பிரதமர் மோடி தடுமாறி விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன

  தேசிய கங்கை ஆணையத்தின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கான்பூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர், உத்தரகாண்ட் முதலமைச்சர் மற்றும் பிகாரின் துணை முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். 

   

   

  இந்த கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி, படியில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார். உடனே சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி தன் கையை தரையில் ஊன்றினார். உடனே அருகிலிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தூக்கினர். இதில் பிரதமர் மோடிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தடுமாறி கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.