படப்பிடிப்பிற்காக நிஜ கட்டிடம் கட்டி, கிராமத்திற்கு கொடுத்த விஜய்சேதுபதி!

  4
  விஜய்சேதுபதி

  படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் விஜய்சேதுபதி, ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் இந்த திரைப்படம், விவசாயத்திற்காக இந்தியாவின் அன்றைய கால பங்கு பற்றியும், அப்படி ஒரு காலத்தில் விவசாயத்தில் உலகமே வியக்கும் அளவிற்கு இருந்த நாட்டில் இன்று விவசாயம் ஏன் நலிவடைந்து வருகின்றது என்பது பற்றியும் விளக்கும் விதமாக தயாராகிவருகிறது.

  vijaysethupathi

  இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக விவசாயிகள் சங்கக் கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல், உண்மையாகவே கட்டச் சொல்லி விட்டாராம் நடிகர் விஜய்சேதுபதி. அதோடு மட்டுமல்லாமல், படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக் கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லிவிட்டாராம். படத்தின் கதை மட்டுமல்லாமல், படப்பிடிப்பும் அங்குள்ள மக்களுக்கு லாபமாக அமைந்துள்ளதில் பலரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். 
  நம்மிடமிருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும்தான் பிரிட்டிஷ்காரன் கண்களை உறுத்தியது என்றும், நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத் தான் பிரிட்டிஷ்காரன் இங்கே 300 வருடம் டேரா போட்டான் என்றும் படத்தைப் பற்றி  ஜனநாதன் கூறினார்.