பஞ்சாமிர்தம் விற்று தங்கமாய் வாங்கி அடுக்கிய சித்தனாதன்! விடாமல் துரத்தும் வருமானவரித்துறையினர்

  0
  1
  IT Raid

  பழனி சித்தனாதன் பஞ்சாமிர்தம் கடைகளில் வருமான வரி துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

  பழனியிலுள்ள சித்தனாதன், கந்தவிலாஸ் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடைபெற்றுவருகிறது. நேற்று பழனி சித்தனாதன் பஞ்சாமிர்தம் கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆவணங்களை சரிபார்த்துவருகின்றனர். 

  Palani

  சோதனையில் தினசரி வியாபாரத்தை கால்வாசியாக குறைத்துக் காட்டி மோசடி  செய்தது தெரியவந்தது. ஒட்டுமொத்த வருமானத்தையும் தங்கத்தில் முதலீடு செய்துள்ள நிலையில் அதனை கண்டுபிடித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர்.