பச்சை மிளகாய் சாப்பிட்டு இருவரை எவிக்ஷனில் இருந்து காப்பாற்றிய தர்ஷன்

  0
  2
  தர்ஷன்

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல்  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல்  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி, வனிதா ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று சேரன்  வெளியேற்றப்பட்டார். இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள்  6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். 

  tharshan

  இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல்  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ‘பிக் பாஸ் கான்ஸ்டக்ஷன் ரூமில் பிக் பாஸ் தர்ஷனிடம் நீங்கள் காப்பாற்ற விரும்பும் அந்த ஒருவர் யார் என்று கேட்க, அதற்கு தர்ஷன் ஷெரின். ஏன்னா ஷெரின்  பெயரை யாரும் சொல்ல மாட்டாங்க என்று கொள்கிறார். அப்போ உங்க முன்னாடி இருக்க பச்சை மிளகாயில் ஒன்ன  எடுத்து சாப்பிடுங்க என்று பிக் பாஸ் சொல்கிறார். தர்ஷனும் பச்சை  மிளகாயை சாப்பிடுகிறார்.  உடனே பிக் பாஸ் நீங்க  இன்னொருத்தரையும் காப்பாத்தலாம் என்று சொல்ல. கொஞ்சம் கூட யோகிக்காமல் பச்சை மிளகாயை மீண்டும் சாப்பிடுகிறார் தர்ஷன். யாரை காப்பாத்த போறீங்க என்று பிக் பாஸ் கேட்க சாண்டி  அண்ணா’ என்று சொல்கிறார் தர்ஷன். 

   

  இதன்மூலம் ஹவுஸ்மேட்ஸ் யாரைக் காப்பாற்றுவார்கள் யாரை எவிக்ஷனுக்கு அனுப்புவார்கள் என்பது இன்று தெரியவரும்.