பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 ஆவது ஜெயந்தி விழா: மு.க ஸ்டாலின் மரியாதை..

  0
  2
  MK Stalin

  பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 57 ஆவது குருபூஜையும் கடந்த 28 ஆம் தேதி அன்றே யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

  பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 57 ஆவது குருபூஜையும்  கடந்த   28 ஆம் தேதி அன்றே யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இன்று தேவரின் ஜெயந்தி விழாவால் பசும்பொன் கிராமம் முழுவதும் முழு கண்காணிப்பு போடப்பட்டு ஆயிரக் கணக்கான போலீசார் அங்குக் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ட்ரோன் கேமராக்கள் மூலம் அக்கிராமம் முழுவதும் கண்காணிக்கப் பட்டு வருகிறது. 

  MK Stalin

  இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவச் சிலைக்கு இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அவருடன் இணைந்து திமுக கழக தொண்டர்களும் தேவரின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.