பசியைத் தூண்டும் வரகு புதினா சாதம்

  0
  2
  வரகு புதினா சாதம்

  தேவையான பொருட்கள்
  வரகரிசி -200கி
  புதினா -1கட்டு
  தேங்காய் துருவல் -4 டீஸ்பூன்
  காய்ந்த மிளகாய் -2
  புளி -சிறிய எலுமிச்சை அளவு
  பூண்டு -3பல்
  பச்சைமிளகாய் -2

  தேவையான பொருட்கள்
  வரகரிசி -200கி
  புதினா -1கட்டு
  தேங்காய் துருவல் -4 டீஸ்பூன்
  காய்ந்த மிளகாய் -2
  புளி -சிறிய எலுமிச்சை அளவு
  பூண்டு -3பல்
  பச்சைமிளகாய் -2
  கடுகு -1/2 டீஸ்பூன்
  உ.பருப்பு -1/2 டீஸ்பூன்
  வேர்க்கடலை -2 டீஸ்பூன்
  பெருங்காயம் -1சிட்டிகை
  எண்ணெய் -4டேபிள் ஸ்பூன்
  கறிவேப்பிலை-சிறிதளவு
  உப்பு -தேவையான அளவு

  varagu pudhina rice

  செய்முறை
  வரகரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, புதினா, பச்சை மிளகாய், புளி, பூண்டு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கி ஆறிய பின், கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு,வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள புதினாவை சேர்த்து வதக்க வேண்டும். இதனோடு வேக வைத்து எடுத்துள்ள வரகரிசி சாதத்தை நன்கு உதிர்த்து விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். சாதம், மசாலா எல்லாம் சேர்ந்து வருகிற சமயத்தில் இறக்கி விட்டு பரிமாறலாம். சிப்ஸ், வடகம், வத்தல் சேர்த்து பரிமாற ருசி அபாரமாக இருக்கும்.