பங்குச் சந்தைகளை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ்… முதலீட்டாளர்களுக்கு ரூ.4.44 லட்சம் கோடி நஷ்டம்… சென்செக்ஸ் 1,710 புள்ளிகள் வீழ்ச்சி…

  0
  6
  பங்கு வர்த்தகம்

  இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மீண்டும் ஒரு பெரிய சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,710 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

  கொரோனா வைரஸ் பயம் இன்னும் பங்குச் சந்தைகளை ஆட்டி படைக்கிறது. மேலும் பல முன்னணி தரநிர்ணய நிறுவனங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தங்களது மதிப்பீட்டை குறைத்துள்ளன. நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதை காட்டிலும் தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் இன்றும் வீழ்ச்சி கண்டது.

  ஓ.என்.ஜி.சி.

  சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஓ.என்.ஜி.சி. மற்றும் ஐ.டி.சி. ஆகிய 2 நிறுவன பங்குகளின் விலை மட்டும் உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.எப்.சி. வங்கி, ஹீரோமோட்டோகார்ப் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 28 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

  கோடக் மகிந்திரா வங்கி

  மும்பை பங்குச் சந்தையில் இன்று 963 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,882 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 186 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.115.13 லட்சம் கோடியாக சரிந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ரூ.4.44 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

  இழப்பு

  இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,709.58 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 28,869.51 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 498.25 புள்ளிகள் சரிந்து 8,468.80 புள்ளிகளில் முடிவுற்றது.