பங்குச் சந்தைகளில்  தொடர் ஏற்றம்! சென்செக்ஸ் 125 புள்ளிகள் உயர்ந்தது.

  0
  2
  பங்கு வர்த்தகம்

  கடந்த சில வணிக தினங்களாக இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் நன்றாக இருந்து வருகிறது. சென்செக்ஸ் 125 புள்ளிகள் உயர்ந்தது.

  கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தையில் பலத்த அடி விழுந்ததால் பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை குறைவாக இருந்தது. இதனை முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பாக கருதி முதலீட்டாளர்கள் அந்நிறுவன பங்குகளை வாங்கி குவித்தனர். மேலும் சர்வதேச நிலவரங்களும் பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக இருந்ததால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

  சென்செக்ஸ் உயர்வு

  சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில் யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், மாருதி, டாடா ஸ்டீல், வேதாந்தா, இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் ஆட்டோ உள்பட 17 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. ஓ.என்.ஜி.சி., எச்.சி.எல்.டெக்னாலஜிஸ், பார்தி ஏர்டெல், இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 

  மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,845 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 775 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேவேளையில், 155 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.141.81  லட்சம் கோடியாக உயர்ந்தது. நேற்று முன்தினம் பஙகு வர்த்தகம் முடிவடைந்த நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.141.13 லட்சம் கோடியாக இருந்தது.

  பங்கு வர்த்தகம்

  இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 125.37 புள்ளிகள் உயர்ந்து 37,270.82 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 32.65 புள்ளிகள் உயர்ந்து 11,035.70 புள்ளிகளில் நிலை கொண்டது.