பங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்… நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்…

  0
  3
  goabungeejumping

  இந்நிலையில், வடக்கு கோவாவில் உள்ள மாயெம் ஏரியில் பங்கி ஜம்பிங் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக மாயெம் ஏரியின் மீது 55 மீட்டர் குதிக்கும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு ‘ஜம்பிங் ஹைட்ஸ்’ என்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

  கடற்கரை சுற்றுலாவா அப்போ கோவாதான் போகனும். இனி பங்கி ஜம்பிங் என்னும் சாகச விளையாட்டுக்காகவும் கோவா போகலாம்.

  goa

  விடுமுறையை இயற்கை எழில் கொஞ்சும் கோவாவுக்குச் சென்று மகிழ்ச்சியாக செலவுசெய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கனவாக உள்ளது. நம்மில் பலரும் கோவா சென்று வரப் பலமுறை திட்டமிட்டிருப்போம். அதை ரத்து செய்தும் இருப்போம். சிலருக்கு மட்டுமே கோவா செல்லும் கனவு நனவாகியிருக்கும். மொரிஷியஸ் மால்தீவ்ஸ் போன்ற இடங்களுக்கு செல்வதைக் காட்டிலும் கோவாவுக்கு செல்வதையே பலர் முதன்மை விருப்பமாக கொண்டுள்ளனர். கல்லூரி மாணவர்கள் முதல் வெலைக்கு செல்ப்வர்கள் வரை எல்லோரட பட்ஜெட்க்கும் ஏற்ற சுற்றுலாவா கோவா இருக்கும். 5,000 ரூபாய் இருந்தால் போதும் கோவாவுக்கு சென்று வரமுடியும். உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள்  கோவாவிற்கு வந்து செல்கின்றனர். இரவு விடுதி, கடற்கரைகளைத் தாண்டி கோவாவில் இருக்கும் சுதந்திரமும், வெப்பநிலையும், நீர்வீழ்ச்சிகளும், பழைய தேவாலயங்களும், கலாச்சார நிகழ்ச்சிகளும், தீவுகளும்,பாரம்பரிய உணவுகளும் மக்களை சுண்டி இழுக்கிறது.

  இந்நிலையில், வடக்கு கோவாவில் உள்ள மாயெம் ஏரியில் பங்கி ஜம்பிங் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக மாயெம் ஏரியின் மீது 55 மீட்டர் குதிக்கும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு ‘ஜம்பிங் ஹைட்ஸ்’ என்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

  bungee jump

  இதுபோன்ற சாகசங்களை சராசரி மக்கள் யாரும் பெரிதும் விரும்புவதில்லை என்றாலும், இதை விரும்பு மக்கள் இதை செய்ய வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இந்தியாவில் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. 

  முதன்முதலாகப் பங்கி ஜம்பிங் விளையாட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தர காண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு 83 அடி உயரத்தில் குதிக்கும் மேடை அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிக அதிக உயரத்தில் குதிக்கும் மேடை அமைந்திருக்கும் இடம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதுதவிர, மகாராஷ்டிராவில் உள்ள லோனாவ்லா, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் பங்கி ஜம்பிங் விளையாட்டு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க ரூபாய் 1500 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.