பக்தர்கள் கும்பிடும்போதே சிலையை திருடிச் சென்ற கும்பல் ! சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபர்களுக்கு வலை !

  0
  2
  anjeyanar

  தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஆஞ்சநேயர் சிலையை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் ஆஞ்சநேயர் சிலையை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

   

  தஞ்சை கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ள துர்க்கையம்மன் பிரசித்தி பெற்றது. மூலவரின் வலதுபுற சன்னதியில் சுமார் 1 அடி உயரம் உள்ள பழமையான ஆஞ்சநேயர் சிலை ஒன்று உள்ளது.

  patteswaram

  நேற்று முன்தினம் விடுமுறை நாளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அந்த பரபரப்பான கூட்டத்திற்கு நடுவில் காரில் வந்த மர்மக் கும்பல் ஒன்று தங்கள் கைவரிசையை காட்டி அங்கிருந்த ஆஞ்சநேயர் சிலையை அபகரித்து சென்றது. சுமார் 8 மணி அளவில்  குருக்கள் கணேஷ் சன்னதியை சுற்றி வந்தபோது ஆஞ்சநேயர் சிலை மாயமானதை கண்டுத்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக கோயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சுமார் 7 மணி அளவில் காரில் வந்த கும்பல் மிகவும் பயபக்தியாய் சாமி கும்பிட்டுள்ளனர். 5 பேரில், 3 பேர் சுவரை மறைத்து கொண்டு நிற்க, 2 பேர் ஆஞ்சநேயர் சிலையை கைகளால் ஆட்டி பெயர்த்து எடுத்து, பைக்குள் வைத்து வெளியே எடுத்துச் சென்றதும், பின்னர், காரில் ஏறி 5 பேரும் அங்கிருந்து சென்றதும் அந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இது குறித்து புகார் அளிக்கப்பட்டு, பட்டீஸ்வரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிலை திருடர்களை தேடி வருகின்றனர்.