பக்கா மாஸ் ஓப்பனிங் சாங்: 100 குழந்தைகளுடன் விஜய் டான்ஸ்?

  0
  1
  vj

  தளபதி 63 படத்தின் ஓப்பனிங் சாங் உருவாக்கம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

  சென்னை: தளபதி 63 படத்தின் ஓப்பனிங் சாங் உருவாக்கம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

  அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘தளபதி 63’. இதில் கதிர், யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி மற்றும் ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றனர். இதில் விஜய்யின் ஓப்பனிங் சாங் ஏஆர் ரஹ்மான் இசையில் பக்கா மாஸாக உருவாகியிருக்கிறதாம், பின்னி மில்ஸ்ஸில் படமாக்கப்பட்ட இந்தப் பாடலில் 600-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் விஜய்யோடு 100 குழந்தைகள் டான்ஸ் ஆடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தத் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.