நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் சிகரெட், மது! – சுகாதாரத் துறை எச்சரிக்கை

  0
  16
  REp Image

  கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இந்த நேரத்தில் சிகரெட், மது உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து கொரோனா வருவதற்கான வாய்ப்பை அதிகரித்துவிடும் என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரக்கைவிடுத்துள்ளது.

  கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இந்த நேரத்தில் சிகரெட், மது உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து கொரோனா வருவதற்கான வாய்ப்பை அதிகரித்துவிடும் என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரக்கைவிடுத்துள்ளது.

  smoking-and-drinking-89

  தமிழகத்தில் முதலில் ஊரடங்கு உத்தரவு மார்ச் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று திடீரென்று அறிவித்ததால் பொது மக்களில் குடிமகன்கள் அல்லாடிப்போனார்கள். ஏழு நாளைக்கு ஏற்ற வகையில் மது வகைகளை வீட்டில் வாங்கி பதுக்கிய குடிமகன்களுக்கு மோடியின் அறிவிப்பு இடியாக விழுந்தது. மேலும், செயின் ஸ்மோக்கர்சும் இதனால் பாதிக்கப்பட்டனர். 

  say-no-to-alcohol

  இந்த நிலையில் சிகரெட், மது பழக்கம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும் என்று மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள குறிப்பில், “யாருக்கு எல்லாம் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதோ அவர்களை எல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துங்கள். தேவை எனில் மருத்துவ சிகிச்சையை நாட சொல்லுங்கள். கொரோனா பாதிப்பு மட்டுமின்றி, இதனால் மன அழுத்தம் ஏற்பட்டவர்களும் மருத்துவர்களின் உதவியை நாடலாம். ஊரடங்கு என்பது கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை. நம்மையும் நம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை. 

  smoking-and-drinking

  எனவே, அடிக்கடி வெளியே செல்வது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டாம். இது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.
  இந்த சிக்கலான நேரத்தில் நம்மை நாமே பாதுகாத்தல்தான் மிக முக்கியமானது. மற்றவர்களுடன் நெருக்கம் காட்ட வேண்டாம். பொது இடத்தில் தும்மல், இருமல் வரும்போது கைக்குட்டையை வைத்து மறைத்துக்கொள்ளுங்கள். கண்ட இடங்களில் துப்ப வேண்டாம். 
  கொரோனா நோய்த் தொற்று நோய் எதிர்ப்ப சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு எளிதில் வருகிறது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் சிகரெட் புகைத்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களைத் தவிர்த்துவிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.