நோய்களை விரட்ட வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கூட்டணி

  0
  59
  vendhayam

  வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து ஒன்றாக சாப்பிட்டால் என்ன பலன்கள் கிடைக்கிறது என பார்க்கலாம்.

  வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து ஒன்றாக சாப்பிட்டால் என்ன பலன்கள் கிடைக்கிறது என பார்க்கலாம்.

  அதாவது வெந்தயம் 250 கிராம், ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம் ஆகியவற்றை வறுத்து தூற் செய்து ஒன்றாக கலந்து பாட்டிலில் வைத்துக்கொள்ளவேண்டும். இதை நாள்தோறும் ஒரு ஸ்பூன் அளவு இரவில் மிதமான சுடுநீரில் போட்டு குடிக்க வேண்டும். இதை குடித்தவுடன் உணவு எதுவும் சாப்பிடக்கூடாது. நாள்தோறும் சாப்பிட்டு வந்தால், உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேறிவிடும். தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படும். இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும்.

  vendhayam

  இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு இருதயம் சீராக இயங்கும். சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கிவிடும். உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகும். எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்கும். ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடையும். கண் பார்வை தெளிவடைந்து, நல்ல முடி வளர்ச்சி உண்டாகும். மலச்சிக்கல் நீங்கி, நினைவாற்றல் மேம்படும். கேட்கும் திறன் அதிகரிக்கும். பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்கும். பாலியல் பலவீனங்கள் நீங்கிவிடும். நீரிழிவு நோய் கட்டுப்படுத்தும். வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.