‘நொடியும் என் மனம் தாங்காதே’: ஷெரின் மீது காதலில் விழுந்த தர்ஷன்  

    0
    1
    ஷெரின்- தர்ஷன்

    பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

    சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

    பிக் பாஸ் சீசன் தொடங்கி வெற்றிகரமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதுவரை  பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன் மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷன் கிடையாது என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

    இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அந்த புரோமோவில் தர்ஷன் மற்றும் ஷெரின் காதல் குறித்து காட்டப்பட்டுள்ளது. இந்த வாரம் ஷெரின் நாமினேட் ஆகியுள்ளதால் அவர் வெளியே செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தர்ஷன் நினைத்து வருத்தப்படுகிறார். 

    வருத்தத்தில் தர்ஷன், ‘நொடியும் என் மனம் தாங்காதே.. என்ன நேருமோ தெரியாதே
    என் ஜீவன் ஏங்குதே…’ என்று சோகமாகப் பட மற்ற ஹவுஸ் மேட்ஸ் எதையும் கண்டுகொள்ளாதது போல் அவர்களைப் பார்த்துச் சிரிப்பது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.