நேற்றைய கிரகணத்தின் போது திறந்திருந்த ஒரே கோவில் எது தெரியுமா..!?

  0
  2
  vanjinathan-temple

  அந்தக் கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் இருக்கும் திருவாஞ்சியம். நன்னிலத்தில் இருந்து தென்மேற்கில் 7 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்தத் ஸ்தலம்.பாடல்பெற்ற காவிரித் தென்கரைத் ஸ்தலங்களில் இது 70 வது ஸ்தலம். 

  அந்தக் கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் இருக்கும் திருவாஞ்சியம். நன்னிலத்தில் இருந்து தென்மேற்கில் 7 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்தத் ஸ்தலம்.பாடல்பெற்ற காவிரித் தென்கரைத் ஸ்தலங்களில் இது 70 வது ஸ்தலம். 

  திருவாஞ்சியம், ஜாந்தாரண்யம், சந்தனவனம், பூகைலாசம், வாஞ்சியம்பதி, திருவறையூர் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள். புத்தாற்றின் வடகரையில் 3.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரமும் மூன்று பிரகாரங்களும் கொண்டது. ஈசனின் திருப்பெயர் இங்கே ஸ்ரீவாஞ்சிநாதர், அம்மை வாழவந்த நாயகி.தீர்த்தம் யமதீர்த்தம், குப்தகங்கை, ஆனந்தகூபம். ஸ்தலமரம் சந்தனம்.

  thiruvanjiyam

  திருவாஞ்சியம் காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு தலங்களில் ஒன்று. திருமால், திருமகள் என்றும் தன்னிடம் வாஞ்சையுடன் இருக்க வேண்டும் என்று தவமிருந்து வரம் பெற்றதால் திருவாஞ்சியமானது. இது யமன் வழிபட்ட இடம்.இங்கே எமனுக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. எமன் இங்கே ஈசனுக்கு வாகனமாகவும் இருக்கிறார். அதனால் இந்த ஊரில் இறப்பவர்களை எமன் துன்புறுத்துவதில்லை என்பது நம்பிக்கை. இங்குள்ள குப்த கங்கையில் கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி வழிபாடு செய்தால் ஏழு ஜென்மங்களிலும் செய்த பாவங்கள் தீரும்.

  மற்ற கோவில்களுக்கு இல்லாத மூன்று தனிச்சிறப்புகள் இத்தலத்திற்கு உண்டு.
  ஆலையத்தினுள் நுழைந்த உடன் மற்ற ஆலயங்களில் செய்வது போல் முதலில் பிள்ளையாரை வழிபடக்கூடாது. இங்கே தனிச் சந்நிதியில் எழுந்தருளி  இருக்கும் எமனைத்தான் முதலில் வணங்க வேண்டும்.

  ஊரில் மரணம் நிகழ்ந்தால் கோவில் நடையை சாத்தும் வழக்கம் இங்கில்லை. அன்றும் கோவில் நடை திறந்தே இருக்கும். ஆறுகால பூஜையும் உண்டு. சூரியகிரகணம், சந்திரகிரகணம் நிகழும்போதும் இந்தக் கோவிலின் நடைசாத்தப்படுவதில்லை. வழக்கமான வழிபாடுகள் நடை பெறும். இவை மூன்றும் வேறு எங்கும் இல்லாத நடைமுறைகள் ஆகும்.ஆடிப்பூரம், கார்த்திகை ஞாயிறு, மாசிமகம் ஆகியவை இங்கே முக்கியமான திருநாட்கள்.