நேற்று இன்று நாளை பட இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா !

  0
  6
  Surya - Director ravi kumar

  நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வந்த படம் காப்பான் இந்த படம் சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

  நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வந்த படம் காப்பான் இந்த படம் சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இப்போது சூர்யா சூரரைப் போற்று படத்தின் டப்பிங்கில் பிஸியாக உள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடைக்குத் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, எஸ்.ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்த படத்திற்கு நடிகர் சூர்யா கையெழுத்திட்டுள்ளார் என்று  தகவல் வெளியாகியுள்ளது.

  surya

  இந்த படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்க வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது . அப்படி இந்த செய்தி உண்மையானால் சூர்யாவும் இயக்குநர் ரவிக்குமாரும் முதன்முறையாக இணையும் படமாக இருக்கும் . இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயனின் நடிப்பில் இன்னும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.