நேர்கொண்ட பார்வை’ பாக்கப் போறேன்…லீவு கொடுங்க! வைரலாகும் மாணவனின்  லீவ் லெட்டர்!

  0
  2
  தல அஜித்

  தல அஜித்தின் நேரக்கொண்ட பார்வை படம் பார்க்க அனுமதி கேட்டு கல்லூரி மாணவர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதியது வைரலாகி வருகிறது.

  சென்னை: தல அஜித்தின் நேரக்கொண்ட பார்வை படம் பார்க்க அனுமதி கேட்டு கல்லூரி மாணவர் ஒருவர் விடுப்பு கடிதம் எழுதியது வைரலாகி வருகிறது.

  தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 

  உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை இன்று வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் திரையரங்கிற்குச் சென்று பார்த்து மகிழ்கின்றனர். இந்நிலையில், நாகையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி துறைத் தலைவருக்கு இன்று நேர்கொண்ட பார்வை படத்தைக் காணச் செல்வதால் தனக்கு விடுமுறை அளிக்குமாறு விடுப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

  இதனைக்கண்ட துறைத் தலைவர் அக்கடிதத்தில் மாணவரின் பெற்றோரை அழைத்துக் கொண்டு தன்னை வந்து சந்திக்குமாறு குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.