நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்த ரஜினி பட நடிகர்

  0
  1
  தல அஜித்

  நேர்கொண்ட பார்வை படத்தில் ரஜினியின் 2.o படத்தில் நடித்த கே.கே.மேனன் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது

  சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தில் ரஜினியின் 2.o படத்தில் நடித்த கே.கே.மேனன் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

  விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். 

  மேலும் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தைத் தயாரித்துள்ளார்.

  kay kay

  இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இதில் நாச்சியார்,2.0,மீசையை முறுக்கு உள்ளிட்ட படங்களில் நடித்த கே.கே.மேனன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

  இது பற்றி அவர் கூறுகையில், இதில் நான் நடித்துத்திருப்பது உண்மை தான். நான் HR மேனேஜர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மேலும் அஜித்துடன் எனக்கு ஒரு சீன் நடிக்க கூட வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.