‘நேர்கொண்ட பார்வை’ நடிகை 5 மாத கர்ப்பம்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

  0
  2
  நேர்கொண்ட பார்வை

  நடிகை கல்கி கோச்சலின் தான் 5மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

  பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின் தான் 5மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

  kalki

  பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின் தேவ் டி, கல்லி பாய், யெ ஜவானி ஹெய் திவானி  போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப்  பெற்ற நேர்கொண்ட பார்வை  படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். 

  kalki

  இந்நிலையில் கல்கி கோச்சலின்  இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஹெர்ஸ்பெர்க்  என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் தற்போது தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

  kalki

  இதற்கான புகைப்படத்தைத் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதோடு, வாட்டர் பாத் முறையில்  குழந்தை பெற்றுக்கொள்ளப்  போவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சமூகத்திற்காக திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். தற்போது கல்கி கோச்சலின் கர்ப்பமாக இருக்கும் புகைப்படமானது சமூகவலைதளத்தில்  வைரலாகி வருகிறது.