நேர்கொண்ட பார்வை: திருப்பதிக்குச் சென்று வெறித்தனமாக தரிசனம் செய்யும் தல ரசிகர்கள்

  0
  2
  தல அஜித்

  நேர்கொண்ட பார்வை படம் வெற்றியடையத் தல ரசிகர்கள் திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்யவுள்ளனர். 

  சென்னை: நேர்கொண்ட பார்வை படம் வெற்றியடையத் தல ரசிகர்கள் திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்யவுள்ளனர். 

  பொதுவாக ஒரு பெரிய ஹீரோ படங்கள் வெளியானால் அந்த நாளன்று பேனர் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என்று ரசிகர்கள் அதகளப்படுத்தவர்கள். அது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவு இருந்தும் ரசிகர்கள் அதை கண்டுகொள்ளாமல் வழக்கமாகச் செய்து வருகின்றனர். 

  இதற்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று ஒரு சில ரசிகர்கள் அந்த படத்திற்காக அலகு குத்துவது மற்றும் காவடி எடுப்பது என்று தங்களது விஸ்வசத்தை வெறித்தனமாக காட்டுவார்கள். இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் அஜித் சற்று விதியசமாக இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாவே காணப்படுகிறது. 

  தற்போது படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கையில் மதுரையில்யுள்ள சில தல ரசிகர்கள் திருப்பதிக்குச் சென்று படம் வெற்றி பெற ஏழுமலையானை தரிசனம் செய்யவுள்ளார்களாம். அதற்கான பேனர் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் ‘மனித கடவுள் அஜித் பக்தர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பேனர் தற்போது தல ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.